Tuesday, September 15, 2015

படரும் வெளி


கொடியெனப் படர்ந்திருக்கும்
தனிமையின் இலைகளில்
எறும்புகள் ஊர்வது
அதிசயமில்லை

பற்றிக்கொள்ள
என்னைத் தவிர எதுவுமில்லை
என்றான பின்
பின்னிப் பிணைத்துக்கொள்ளும் பேரன்பு
சுரந்து வழிகிறது பகல் முழுதும்
இரவிலும் கூட....

விரிந்த கிளைகளில்
மலர்ந்த கூடுகளில்
குஞ்சுகளின் கிசுகிசுப்புகளும்
அந்தியில் பறவைகளின்
கீச்சொலிகளும்
வானத்தைக் குளிப்பாட்டுகின்றன

நகர்தலை சாத்தியமற்றதாக்கிவிட்ட
வேர்கள்
நகர்தல் அர்த்தமற்றதெனவும்
சொல்லிக் கொண்டிருக்கின்றன




உன் முத்தமானாலும்
அது உனக்கீடானதில்லை
என்பதான
ஒரு மழைத்துளி
உன் கடைசி நேர
கையசைப்பிலிருந்து
பொழிந்தபடியிருக்கிறது

1 comment:

  1. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்,,

    ReplyDelete